WikiNano.
Tamil Calendar 2027
முகப்பு

தமிழ் நாட்காட்டி2027

Tamil Calendar 2027

பராபவ–பிலவங்க ஆண்டு · திருவள்ளுவர் ஆண்டு 2057–2058 · ஹிஜ்ரி 1448–1449

தமிழ்நாடு அரசு பொது விடுமுறைகள், வங்கி விடுமுறைகள், பண்டிகைகள், நட்சத்திரம், திதி, சூரிய உதயம், ராகு காலம் — மாநிலத்தின் 16 நகரங்களுக்கு.

சிவப்பு: அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அடிக்கோடு: வங்கி விடுமுறை (ஊதா), பண்டிகை (பச்சை). ஒரு தேதியைத் தொட்டால் அந்த நாள் மேலே திறக்கும்.

கிரகணங்கள் 2027

நேரம் இந்திய நேரம் (IST). தெரிவுநிலை சென்னையை அடிப்படையாகக் கொண்டது; மாநிலத்தின் பிற இடங்களில் சில நிமிட வேறுபாடு இருக்கலாம்.

இந்த நாட்காட்டி தயாரிக்கப்பட்ட முறை

  1. விடுமுறைகள் தமிழ்நாடு அரசு அறிவித்த 2027 பட்டியலின்படி (24 நாட்கள்; ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினமும் மிலாது நபியும்). ஆயுத பூஜை (அக்டோபர் 8), விஜயதசமி (அக்டோபர் 9) அரசுப் பட்டியல் தேதிகள்; திருக்கணித பஞ்சாங்கங்கள் இவற்றை ஒரு நாள் பின்னதாகக் காட்டலாம். ஆண்டின் இடையில் அரசு சிறப்பு விடுமுறை அறிவிக்கலாம்.
  2. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஐந்து நாள் (திங்கள்–வெள்ளி) இயங்குகின்றன; சனி, ஞாயிறு விடுமுறை. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதிப்படி இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை. அரசு அறிவிக்கும் பொது விடுமுறைகள் மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் (NI Act) கீழ் வருவதால் வங்கிகளுக்கும் பொருந்தும். பள்ளிகள், காவல், மருத்துவமனைகள் போன்ற சில துறைகள் வேறு அட்டவணையைப் பின்பற்றலாம்.
  3. தமிழ் மாதப் பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி; தமிழ்நாடு அரசின் பொங்கல் (ஜனவரி 15), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) தேதிகளும் இதையே பின்பற்றுகின்றன. திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ராகு காலம், கிரகணம் ஆகியவை ஸ்விஸ் எபிமெரிஸ் மூலம் லாஹிரி அயனாம்சத்தில் (திருக்கணிதம்) கணக்கிடப்பட்டவை; வாக்கிய பஞ்சாங்க நேரங்களிலிருந்து சில நிமிடங்கள் வேறுபடலாம். நேரம் IST; தேர்ந்தெடுத்த நகரத்தின் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாழிகை 24 நிமிடம்.
  4. தமிழ் ஆண்டு (60 ஆண்டுச் சுழற்சி) சித்திரை முதல் நாளில் மாறும்: 2026 ஏப்ரல் 14 முதல் பராபவ, 2027 ஏப்ரல் 14 முதல் பிலவங்க. திருவள்ளுவர் ஆண்டு தை முதல் நாளில் மாறும் (கிறிஸ்து ஆண்டு + 31). சந்திராஷ்டமம்: சந்திரன் ஒருவரின் ஜன்ம ராசிக்கு எட்டாம் ராசியில் இருக்கும் நாட்கள்.
  5. பண்டிகைகள் தமிழ் மாதம், நட்சத்திரம், திதி விதிகளின்படி கணக்கிடப்பட்டவை (நட்சத்திர விழாக்களுக்கு சூரிய உதய நட்சத்திரம்). 2026இல் வைகாசி விசாகம் (மே 30), ஆடிப் பெருக்கு (ஆகஸ்ட் 3), ஆடிப் பூரம் (ஆகஸ்ட் 14), கந்த சஷ்டி (நவம்பர் 15), கார்த்திகை தீபம் (நவம்பர் 24), வைகுண்ட ஏகாதசி (டிசம்பர் 20) ஆகியவை வெளியிடப்பட்ட தேதிகளுடன் ஒத்துப் போகின்றன. கோயில் அறிவிப்புகளின்படி மாறலாம்.
  6. * குறியிட்ட இஸ்லாமிய விடுமுறைகள் பிறை பார்ப்பதைப் பொறுத்து ஒரு நாள் மாறலாம். ஹிஜ்ரி தேதி தோராயமானது (±1 நாள்), இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட மாதத் தொடக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
  1. Goodreturns: Tamil Nadu holidays 2027, 24 public holidays
  2. DT Next: Tamil Nadu government offices functional five days a week (G.O.)

அதிகாரப்பூர்வ தேவைகளுக்கு அரசிதழ் அறிவிப்பைச் சரிபார்க்கவும்.

About Tamil Calendar 2027

The 2027 Tamil calendar with Tamil Nadu government, bank and restricted holidays, festivals, and daily nakshatram, thithi, sunrise and Rahu kalam for 16 cities.

Topic: Tamil calendar 2027 · Format: calendar and panchangam · Free, no sign-up · Updated 2026-11-06 · By Prince Vincent, WikiNano · Last reviewed 2026-11-06.

Inside this page

Common questions

Which Tamil Nadu holidays are included?
The Tamil Nadu government's public holidays, bank holidays and restricted holidays for 2027, as notified, plus major festivals. Always confirm local holidays with your office or bank.
How are sunrise and Rahu kalam worked out?
From the real sunrise and sunset of each place, for 16 cities. Rahu kalam is one of eight equal parts of the daytime, chosen by the weekday.
Can I see other years or languages?
Yes. The calendars page links the Malayalam, Kannada, Tamil and Hindi calendars for 2026 and 2027.

Sources and further reading

Keep exploring